கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தாலி நாட்டில் சிக்கித் தவித்த 263 இந்திய மாணவர்கள், ரோமிலிருந்து  ஏர் இந்தியா விமானம் மூலம்  இன்று காலை டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா நடவடிக்கை காரணமாக உலக நாடுகள் பல விமான சேவைகளுக்கும் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், இத்தாலியில் தங்கி படித்து வந்த இந்திய மாணவர்கள் உள்பட பலர் அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

அவர்கள், தங்களை மீட்குமாறு இந்திய தூதரகத்துக்கும், வெளியுறவுத்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதையடுத்து, இந்திய அரசு சார்பில், ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்தது மத்திய அரசு.

இந்த விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தது. அதில் இருந்து பயணிகள்  இறங்கியதும் அனைவருக்கும்  ஸ்கிரீனிங் டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு பின்னர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இந்தியத் திபெத்திய எல்லையிலுள்ள சாவ்லாவில் இருக்கும் மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க  மற்றொரு விமானம் விரைவில்  இத்தாலிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே முதன்முறையா, இத்தாலியிலிருந்து 218 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர், தற்போது 263 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.