ஜூலை மாத சம்பளம் வழங்கப்பட்டது: ஏர்இந்தியா நிர்வாக இயக்குனர் தகவல்

டில்லி:

ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் தெரிவித்து உளளார்.

ஏர் இந்தியா விமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், அங்கு பணியாற்றும்  ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாக ஏர்இந்தியா விமான சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் பொதுச்சேவை நிறுவனமான ஏர்இந்தியா கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. விமான சேவையில் ஏற்பட்டுள்ள போட்டிகளை  சமாளிக்க முடியாததால் பணியாளர்களுக்கே ஊதியம் தர முடியாத நிலைக்கு சென்றது. மத்திய அரசு சிறப்பு நிதியெல்லாம் ஒதுக்கி சரிவில் இருந்து மீட்க முயற்சித்து வருகிறது.  இருந்தாலும்,  ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில் விமான ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைக்க ஏர்இந்தியா முடிவு செய்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதை கிப்பில் போட்ட ஏர் இந்தியா நிறுவனம், ஜூலை மாதத்திற்கான சம்பளத்தை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்தது.

இது விமான ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், விமானி களும்  ஏர் இந்தியா விமான பராமரிப்பிற்காகவது பணம் உள்ளது என கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ஜூலை மாதத்திற்கான சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்து உள்ளது.