விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை! மத்தியஅரசு

டெல்லி: விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விமானத்தில் பயணிகள் விதிமீறலால் ஈடுபட்டால் குறிப்பிட்ட வழித்தடத்தில் 2 வாரம் அந்த விமானத்தை இயக்க தடை விதிக்கப்படும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
கொரோனா முடக்கம் காரணமாக, விமான சேவைகள்முடக்கப்பட்டு, சிறப்பு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மும்பை வந்த கங்கனா ரனாத்தின்  விமானத்தை ஊடகத்துறையினர் மட்டுமின்றி, சிவசேனா கட்சியினரும் புகைப்படம், வீடியோ எடுத்தனர். இது சமுக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்படுவதாக  மத்தியஅரசு விமானப்போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
பயணிகள் விமானத்தில் யாரேனும் விதிமுறைகளை மீறி யாரேனும் விமானத்திற்குள் புகைப் படம், வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த விமானம், அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இரு வாரங்கள் பறக்க தடை விதிக்கப்படும்.
விமான விதி 1937, விதி 13ன் யின் கீழ் விமானத்தில் பயணிக்கும் எந்த பயணியும் விமானத்திற்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது.விமான போக்குவரத்து அமைச்சகம், டிஜிசிஏ அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் இருந்த போதிலும், சில சமயங்களில் விமான நிறுவனங்கள் இந்த நிபந்தனை களை பின்பற்ற தவறிவிட்டன.
இதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தீவிரம் காட்டுவதில்லை. விதிகளை மீறி புகைப்படம் எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்த பிறகு தான் பயணிக்க அனுமதிக்க முடியும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.