ஆன்லைன் மூலம் செக் இன் செய்ய கட்டணம் : விமான நிறுவனங்கள் அறிவிப்பு

டில்லி

ஆன்லைன் மூலம் செக் இன் செய்பவர்களிடம் அதற்கு கட்டணம் வசூலிக்கபடும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

விமானப் பயணச் சீட்டு இணையம் மூலம் ஆன்லைனில் வாங்கும் போது இருக்கை முன் பதிவு செய்ய இண்டிகோ உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு விமான நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்துள்ளதால் இவ்வாறு செய்வதாக நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பயணிகள் விமானம் ஏறும் முன்பு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பரிசீலிப்பது வழக்கமாகும். இதற்கு செக் இன் என பெயராகும். இதர்கு விமான நிலையத்தில் பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால் ஆன்லைன் மூலம் செக் இன் செய்யும் முறையை அனைவரும் கையாளுகின்றனர். இந்த ஆன்லைன் செக் இன் சேவைக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த பயணிகள் இது குறித்து சமூக வலைத் தளங்கள் மூலம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த விவகாரம் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது. அதை அடுத்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த ஆன்லைன் செக் இன் முறைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தனது டிவிட்டரில் அறிவித்துள்ளது.