புதுடெல்லி: மோசமான நெட்வொர்க் காரணமாக, ஜியோவின் வாடிக்கையாளர்கள் பலர், ஏர்டெல்லுக்கு மாறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, ஜியோ & ஏர்டெல் ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளும், தங்களுக்கான வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு வந்தன. இக்காலகட்டத்தில், இரண்டு நெட்வொர்க்குகளுமே கடும் போட்டியில் இயங்கி வந்தன.

அதேசமயம், கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்த முடிவுசெய்த பிறகு, ஏர்டெல்லுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால், ஜியோ நெட்வொர்க், தனது வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கியது. அந்த இழப்பு, நவம்பர் மாத மத்தியிலிருந்து மிக அதிகமாக இருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு முடியும் தருவாயில், ஏர்டெல் நெட்வொர்க், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஆனால், 2021ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து, Vi(முந்தைய வோடபோன்) நெட்வொர்க், வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.