ஜினிகாந்த் மூத்த மகள், நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. இவர் திரைப்பட இயக்குனராக இருந்ததோடு தற்போது யோகா நிபுணராக தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற திரைப்படம் உள்ளிட்ட 2 படங்கள் இயக்கி உள்ளார். சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் இருக்கிறார்.


சூப்பர் ஸடாரின் மகள் சோடை போக வில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடினமான யுக்திகளுடன் கூடிய யோகாச னங்களை செய்து அப்படங்களை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித் திருக்கிறார் ஐஸ்வர்யா. இவர் உடல் என்ன ரப்பர் உடம்பா என்று கேட்கும் அளவுக்கு அந்த யோகாசன போஸ்கள் அமைந்திருக் கின்றன.

ஹலாசான போஸ்களில் பயிற்சி கள் செய்து படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ள ஐஸ்வர்யா அதன் செய் முறை பயிற்சிகளையும் விளக்கி உள்ளார்.
சத்தான உணவு உட்கொள்ள டிப்ஸ் கொடுத்திருக்கும் அவர், ’பருவகால உணவை சாப்பிடுங்கள். குளிர்காலத்தில் மாம்பழங்கள் வளராததற்கு ஒரு காரணம் இருக்கிறது, கோடைகாலத்தில் ஸ்ட்ராபெர்ரி வளராது. பருவத்தின் பழத்தை அனுபவித்து அதன் அனைத்து இயற்கை நன்மைகளையும் பெறுங்கள் என்று கூறி உள்ளார்.