எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்…!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘டூரிங் டாக்கீஸ்’. இந்தப் படம், 2015-ம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். ஜெய் ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா, அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கிறார்.