ஐஸ்வர்யாராய் மருத்துவமனையில் அனுமதி.. மகளுக்கும் சிகிச்சை

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றனர்.

ஐஸ்வர்யாராய்க்கு திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து நள்ளிரவில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகள் ஆராதயாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமிதாப் குடும்பமே கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டதால் அவர்களது பங்களா சீல் வைக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு சொந்தமான மேலும் 3 பங்களாக்கள் மும்பையில் உள்ளன.
முன்னதாக அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா இருப்பது உடனடி யாக தெரிவிக்கப்பட்டாலும் ஐஸ்வர் ராய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்றே முதலில் தெரி விக்கப்பட்டது. மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தனது இனைய தள பக்கத்தில் முதலில், ஐஸ்வர்யாராய்க் கும், ஆராதயாவுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த மெசேஜை அவர் நீக்கினர், ஆனாலும் பின்னர் அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆராதயாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.