நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சமீபத்தில் இவர் அனுமதிக்கப்பட்டார்.  கடந்த வாரம் அவரின் நிலைமை கவலைக்கிடமானது. இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணராஜ் ராய் உயிரிழந்தார்.

கிருஷ்ணராஜ் ராய், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.