ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். முதலில் இயக்குநராக மோகன் ராஜா ஒப்பந்தமானார்.
தற்போது ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் இயக்குநர் பொறுப்பிலிருந்து மோகன் ராஜா விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. . மோகன் ராஜாவுக்குப் பதிலாக ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது, ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் யார் என்பது குறித்து பல்வேரு முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.
‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் பிரசாந்துடன் கார்த்திக், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.