https://www.instagram.com/p/B-jxfMnB-Sd/

கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் .

சூழ்நிலை இப்படி இருக்க தற்போது திடீரென சில காரணங்களால் வெளிவராத ஐஸ்வர்யா ராய் கடந்த 1997-ம் ஆண்டு நடித்த ‘ராதேஷ்யம் சீதாராம்’ என்ற படத்திலிருந்து ஒரு பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது .

இந்த பாடலுக்கு ஐஸ்வர்யா ராய் நடனமாடும் அழகையும், அவரது முகபாவனைகளையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.