அஜித்திற்கு வாழ்த்து கூற விரும்பும் ஐஸ்வர்யா ராய்…!

நேற்று சென்னையில் நடந்த லாங்கின்ஸ் என்ற வாட்ச் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

அப்போது பேசிய அவர், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிப்பது மிகவும் பெருமையாக உள்ளது. ஒரு நடிகையாக எனது வாழ்நாள் முழுவதும் மணி ரத்னத்துடன் பணியாற்றுவது தான் நான் அவருக்கு கொடுக்கும் மரியாதை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் அஜித்திற்கு வாழ்த்து கூற விரும்புவதாக தெரிவித்தார். “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட ஷூட்டிங்கின் போது அஜித்தை ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு வியக்கத்தகு புரொபஷனல். அஜித்தின் இந்த வெற்றியையும், அவர் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவருக்கு உரியதாகும் என கூறினார்.

மேலும் மீண்டும் அவரை ஒருமுறை பார்த்தால், நிச்சயம் அஜித்துக்கு கைக்குலுக்கி வாழ்த்து கூறுவேன்”, எனக் கூறினார்.