ஷங்கர் படத்தை நிராகரிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்….?

கமல் – ஷங்கர் கூட்டணியில் மீண்டும் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ‘இந்தியன் 2’ பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ப்ரல் 2021-ல் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங், விவேக் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.. அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு மற்றும் இளம் வயது கமல்ஹாசனுக்கு நண்பனாக நடிக்க நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது இப்படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கால்ஷீட் பிரச்சனை காரணமாக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது . ஷங்கர் படத்தை அவர் நிராகரித்திருப்பது திரையுலகினருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்ட்டூன் கேலரி