ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாள மயம்’ படத்துக்கு ஐஸ்வர்யா ராய் வாழ்த்து

ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாள மயம்’ படத்துக்கு பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான  ஐஸ்வர்யா ராய் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஐஸ்வர்யா ராய் வாழ்த்தி வெளியிட்டுள்ள வீடியோ ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளி யிட்டு உள்ளார்.

மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பிரபல படங்களை இயக்கி பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்திருக்கும் ‘சர்வம் தாள மயம்’.

முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தபடத்தில், ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக  அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ள நிலையில், பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இந்த படத்தில், ஜிபி பிரகாஷ் உடன்   நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர்.  படத்தை ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்  தயாரித்துள்ளது. படத்திற்கு இசை  ஏ.ஆர்.ரஹ்மான்.

‘சர்வம் தாள மயம்’ படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்புப் பெற்ற நிலையில், சர்வம் தாள மயம் திரைப்படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் கடந்த நவம்பர் மாதம் 30ந்தேதி மாலை வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.