’உணர்ச்சிபெருக்கில் ஆழ்ந்துவிட்டேன்’ நடிகை ஐஸ்வர்யாராய் உருக்கம்..

--

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாதையடுத்ட்கு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர் .இவர்களில் ஐஸ்வர்யாரா யும், ஆராத்யா இருவரும் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

 


ஐஸ்வர்யாராய் இன்ஸ்டாகிராம் பக்கத்தி ல் ஒருபுகைப்படம் வெளியிட்டிருக்கிறார். அதில் ஐஸ்வர்யா கையெடுத்து கும்பிட்டும், ஆராத்யா இதய வடிவ சின்னத்தை காட்டியபடியும் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
பின்னர் வெளியிட்டுள்ள மெசேஜில், ’எனது மகள் டார்லிங், தேவதை ஆராத்யா, பா (அமிதாப்), அபி (அபிஷேக்) மற்றும் என் மீது மக்கள் அனைவரும் நாங்கள் குணம் அடைய வேண்டும் என்று அன்பு செலுத்தியும் பிரார்த்னை செய்தும் அக்கறை காட்டியும் வாழ்த்துகள் சொல்லியதற்கும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. நீங்கள் காட்டிய அன்பின் மிகுதியில் நான் மிகவும் உணர்ச்சிபெருக்கில் ஆழ்ந்துவிட்டேன். உங்கள் அனைவருக்கும் நான் என்றைக் கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். நீங்கள் நலமுடன் இருக்க என் அன்பும் பிராத்த னையும் இருக்கும். உங்கள் உண்மை யுள்ள, ஐஸ்வர்யாராய். என்றைக்கும் எல்லோரும் நலமுடன் இருங்கள். பாது காப்பாக இருங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.
இவ்வாறு ஐஸ்வர்யாராய் தெரிவித்துள்ளார்.