‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்….!

1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு’.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘முந்தானை முடிச்சு’ படம் ரீமேக் ஆகிறது.

கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் எழுதுகிறார். மே 20-ம் தேதி ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கை ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

You may have missed