பாகிஸ்தானுக்கு புதிய இந்திய தூதர் நியமனம்!

டில்லி,

பாகிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதராக அஜய் பிஸாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது போலந்து நாட்டின் தூதராக இருக்கும் பிஸாரியாவை, பாகிஸ்தானின் உயர்மட்டத் தூதராக நியமித்து மத்திய அரசு அறிவித்தது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பனிப்போர், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்ற சிக்கல்களுக்கு நடுவே பிஸாரியா பொறுப்பேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1987ம் ஆண்டு ஐஎப்ஃஎஸ் பிரிவைச் சேர்ந்த பிஸாரியா, கடந்த 1999 முதல் 2004ம் ஆண்டு வரை பிரதமரின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.

தற்போது அவரை பாகிஸ்தான் தூதராக இந்திய அரசு நியமனம் செய்துள்ளது.