பிரிட்டன் க்ரைம் டிவி சீரிஸ் ரீமேக்கில் அஜய் தேவ்கன்….!

இந்தியின் முன்னணி நடிகராக இருக்கும் அஜய் தேவ்கன் முதல்முறையாக ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார். இது பிரிட்டனில் தயாரான லூதர் டிவி சீரிஸின் இந்திய தழுவல். ஜான் லூதர் என்ற டிடெக்டிவ் சீஃப் இன்ஸ்பெக்டர் எப்படி மர்டர் கேஸ்களை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மையக்கதை.

இந்த எக்ஸென்ட்ரிக் கதாபாத்திரத்தை நடிகர் Idris Elba தனது அருமையான நடிப்பில் உயிர்ப்பித்திருந்தார். இந்த வேடத்தைதான் இந்தியில் அஜய்தேவ் கான் செய்யவிருக்கிறார். லூதர் இதுவரை 5 சீசன்கள் வெளிவந்துள்ளது.

லூதரின் இந்தி பதிப்பை பிபிசியுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து, டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இலியானா இதில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெராரி கி சவாரி படத்தை இயக்கிய ராஜேஷ் மபூஸ்கர் இந்த சீரிஸை இயக்குகிறார்.

லூதர் டிவி சீரிஸை உருவாக்கியவர் நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான நீல் க்ராஸ்.