இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகர் அஜீஷ்….!

 

வெங்கட்பிரபு இயக்கிய ‘கோவா’ திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘இதுவரை’ என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமான அஜீஷ் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை நிரூபித்தவர் .

இந்த நிலையில் செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் ‘சர்பத்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக அஜீஷ் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது .

கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.

படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 5 பாடல்களில் ஒரு பாடல் ப்ராப்பரான திருவிழா பாடலாம். ஒரு பிரண்ட்ஷிப் பாடல் இரண்டு மெலடி பாடல் என வெரைட்டியாக பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருப்பதாக சொல்லும் அஜீஷ் “இசை தான் என் ஜீவன்” என கூறியுள்ளார் .