மும்பை: ஆஸ்திரேலியாவிலிருந்து கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்று இந்தியா திரும்பிய ரஹானேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  ரஹானேவை வரவேற்க  பாந்த்ரா  விழாக்கோலம் கண்டது. அவருக்கு  மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வெற்றியை கொண்டாடும் வகையில், கங்காரு உருவத்துடன் கொண்ட கேக் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த கேக்கை கட் பண்ண ரஹானே மறுத்து விட்டார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அதன் பின்பு தனது மனைவியின் பிரசவத்திற்காக  விராட் கோலி இந்தியா திரும்பினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற  3 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார்.

அதைத்தொடர்ந்து, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அதன் பின்பு சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்திய அணி, பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனை பெற்றது.

இந்தியா தொடரை கைப்பற்றியதற்கு ரஹானேவின் கேப்டன்ஷிப் தான் காரணம் என புகழப்பட்டது. கேப்டன் கோலி இல்லாத நிலையில், இந்திய அணியை வழிநடத்தி வெற்றிக்கோப்பையை எடுத்து வந்த ரஹானாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து, இந்திய வீரர்கள்  நாடு திரும்பினர். அவர்களுக்கு  சிறப்பான வரவேற்புகள் கொடுக்கப்பட்டது. கேப்டன் ரஹானே ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு திரும்பினார்.  அவருக்கு விமான நிலையத்தில் இருந்தே, கிரிக்கெட்  ரசிகர்களும்,  உறவினர்களும் மலர்களை தூவி சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தனர்.

மேலும் அந்த வரவேற்பு விழாவில் வைக்கப்பட்டிருந்த கேக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த  கேக் ஒரு கிரிக்கெட் மைதானம் மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்தது, அதன் மேல் ஒரு கங்காரு அமர்ந்து இந்தியாவின் தேசிய கொடியைப் பிடித்திருந்தது.

இந்த கேக்கை  மும்பையில் உள்ள  கேக் ஹோம் செஃப் பேக்கரி  உரிமையாளர் லிமாயே-காமத் மற்றும், முன்னாள் ராஞ்சி வீரருமான ஜீதேந்திர தக்ரே  ஆகியோர் ஆலோசனையின்பேரில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், கங்காரு உருவத்துடனான கேக்கை ரஹானே வெட்ட மறுத்து விட்டார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கங்காரு ஆஸ்திரேலியாவின் சின்னம் மற்றும் அவர்களின் நாட்டின் பெருமைக்குரிய விலங்கு. ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு  என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக, அழை அவமதிக்கும் வகையில், அந்த கேக்கை ரஹானே கட் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் ரஹானேவின் பெருமை உலக மக்களிடையே மேலும் உயர்ந்துள்ளது.