டில்லி

லகக் கோப்பை அணியில் இடம் பெறாத அஜிங்க்ய ரஹானே கவுண்டி போடிட்யில் ஹாம்ஷையர் அணியில் விளையாட உள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் நடத்தியது. அப்போது கவுண்டி கிளப் போட்டிகளில் இந்திய விரர்களை பங்கேற்க வைப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்தன. இங்கிலாந்து நாட்டில் கோடை காலத்தில் நடைபெறும் கவுண்டி கிளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கு கொள்ள அனுமதி வழங்க பிசிசிஐ ஒப்புக் கொண்டது.

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய டெஸ்ட் அணியின் துணை தலைவர் அஜிங்க்ய ரஹானே இடம் பெறவில்லை. கடந்த 2017 ஆம் வருடம் நடந்த இலங்கை பயணத்தில் இருந்தே அஜிங்க்ய ரஹானே ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்துள்ளார். இது அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறாததற்கான காரணம் என கூறப்ப்டுகிறது.

இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் உள்ள ஹாம்ஷையர் அணியில் இருந்து அஜிங்க்ய ரஹானே வுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அணியில் இணைய அஜிங்க்ய ரஹானே பிசிசிஐ க்கு அனுமதி கோரி உள்ளார். அஜிங்க்ய ரஹானே  கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.