டில்லி

தொடர்ந்து 2 ஆம் முறையாக அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித் தோவல் மத்திய உளவுத் துறை தலைவராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கந்தகாருக்கு கடத்தி சென்ற போது வெற்றிகரமாக பேச்சு வர்த்தை நடத்தி அனைவரையும் மீட்டுள்ளார். அப்போது மத்தியில் பாஜக அரசு அமைந்திருந்தது. கடந்த 2006 அம் ஆண்டு இவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகாராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். இவருடைய ஐந்தாண்டு பணிக்கு பலரும் பராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக சர்ஜிகல் ஸ்டிரைக், பாலகோட் தாக்குதல் போன்றவை இவருடைய முக்கிய நடவடிக்கைகள் ஆகும் .

தற்போது அஜித் தோவல் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவை நியமனக் குழு இதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. அஜித் தோவலுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.