அஜீத்தின் விவேகம் படப்பிடிப்பு நிறைவு: இயக்குநர் சிவா அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்று அப்படத்தின் இயக்குனர் சிவா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சிவா இதற்கு முன் அஜித்தை வைத்து இயக்கிய வீரம், வேதாளம் ஆகிய படத்தின் சாயல் எதுவும் இப்படத்தில் இல்லாமல் வித்தியாசமான கதை அம்சம் மற்றும் காட்சிகளோடு படத்தை எடுத்திருப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் பெரும்பாலான பகுதி ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு சவால்விடும் சண்டைக் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான சில நாட்களிலேயே ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்த்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று இயக்குநர் சிவா, “விவேகம் படத்தின் படப்படிபிடிப்பு நிறைவடைந்துவிட்டது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் விவேகம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.