ராஜஸ்தானில் காங்கிரசுக்கு ஆர்எல்டி கட்சி ஆதரவு! அஜீத்சிங் அறிவிப்பு

போபால்:

ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ராஷ்டிரிய லோக்தள் (ஆர்எல்டி) கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் அஜித்சிங் அறிவித்து உள்ளார்.

199 தொகுதிகளை  கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில்,  102 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்று வருகிறது.

பா.ஜ.க. வேட்பாளர்கள் 72 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக் தள் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த நிலையில்  ராஸ்டிரிய லோக்தள் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அதன் தலைவர் அஜித்சிங் அறிவித்து உள்ளார்.