ட்விட்டரில் ட்ரெண்டாகும் அஜித் பிறந்தநாள் காமென் DP ….!

தல அஜித்துக்கு மே 1ம் தேதி பிறந்தநாள்.இந்த ஆண்டு தனது 49-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் அஜித். வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிடுவது வழக்கம்.

அதற்காக பிரம்மாண்ட ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

ஹன்சிகா, அருண் விஜய், தமன், பிரியா ஆனந்த், ராகுல் தேவ், பார்வதி நாயர், சதிஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, ரைசா வில்சன், நிதி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஆர்த்தி, சாந்தனு ஆகிய 14 பேரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு காமன் டிபியை வெளியிடவுள்ளனர் என அறிவித்திருந்தனர் .

அதன்படி சமூகவலைதளத்தில் அனைவரும் பயன்படுத்துவதற்காக பிறந்தநாள் காமென் டிபி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதை அருண் விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் எஸ்.தமன், ராகுல் தேவ் , பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, நித்தி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி உள்ளிட்ட 14 பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இதை #ThalaAJITHBdayGalaCDP ஹேஷ் டேக் மூலம் சமூலவலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் அவர் ரசிகர்கள்.

இருப்பினும் கொரோனா காலத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

You may have missed