விஷ்ணுவர்தன் பாலிவுட் செல்வதை போன் செய்து பாராட்டிய தல அஜித்….!

நடிகர் தல அஜித் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர்.அவரைப்பற்றி ஒரு சிறிய தகவல் வெளியானாலும் அதை சமூக வலைத் தளங்களில் கொண்டாடுகின்றனர்.

அஜித் கெரியரில் பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பில்லா. அந்த படத்தினை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.

தற்போது விஷ்ணுவர்தன் ஷேர்ஷா என்ற படத்தினை இயக்கி வருகிறார். பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம்.

விஷ்ணுவர்தன் பாலிவுட் செல்வதை அஜித் அவருக்கு போன் செய்து பாராட்டினாராம். “நீங்கள் பாலிவுட் செல்வது கொஞ்சம் தாமதம் தான். எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என கூறி வாழ்த்தினாராம் அஜித்.