https://twitter.com/ThalaAjith_FC/status/1197416779082977281

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் ‘வலிமை’ படத்தில் நடிக்கவுள்ளார். போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே,அஜித் தனது புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றன.

மீண்டும் வெள்ளை முடிக்குத் திரும்பியிருக்கிறார் அஜித் . அதிலும் மீசையை மெலிதாக்கி, அதை தாடி வரை வளர்த்திருக்கிறார். கொஞ்சம் ஃபிட்டாகவும் உள்ளார் .அஜித் ரசிகர்கள் இந்த கெட்டப்பைக் கொண்டாடி வருகிறார்கள்.