அஜீத்தை இயக்கவிருந்த இயக்குனர்.. திடீர் மரணத்தால் நிறைவேறாத ஆசை..

முன்பெல்லாம் இயக்குனர்கள் ஹீரோவை தேர்வு செய்வார்கள் இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் தான் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்க வேண்டும் என்று முடிவு செய்கி றார்கள்.


மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜூ மேனன் நடித்த படம் அய்யப்பனும் கோஷ்யும். இக்கதைக்கு ஹூரோக் களை இயக்குனர்தான் தேர்வு செய்தார். இரண்டு அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் அதிகாரபோட்டியை மைய மாக வைத்து இதன் கதை அமைக் கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி பெரிய வெற்றிபெற்றது. சச்சி இயக்கி இருந்தார். இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதற்கிடையில் சில தினங்க ளுக்கு சச்சி மரணம் அடைந்தார்.


ஏற்கனவே ஐய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்த நடிகர் அஜீத்குமார் இயக்குனர் சச்சியை அழைத்து பாராட்டி னார். வரும் ஆண்டில் இருவரும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்றாராம். அதற்கான கதை உருவாக்கு வதிலும், இதுபற்றி அறிவிக்கவும் முடிவு செய்திருந்தார். இந்தநிலை யில்தான் அவரை மரணம் தழுவிக் கொண்டது. இதனால் சச்சி இயக்கத் தில் நடிக்க விரும்பிய அஜீத் ஆசை நிறைவேறாமல் போனது.

கார்ட்டூன் கேலரி