
தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.
இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதையறிந்து அவர்களுக்காக ஃபெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். இதை ஃபெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel