சஞ்சய் நிலை குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் அஜித் நலம் விசாரித்ததாகத் தகவல்…!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். ஊரடங்கு அமலால் அவரால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை என்று விஜய் வேதனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது மகனின் நிலை குறித்து விஜய்யிடம் அஜித் பேசி நலம் விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது .