‘விஸ்வாசம்’ பார்க்க பணம் கொடுக்காத தந்தைக்கு தீ வைத்த அஜித்குமார்

டிகர் அஜித்குமார் நடித்துள்ள  ‘விஸ்வாசம்’ படம் இன்று நாடு முழுவதும் வெளி யாகி உள்ளது. படத்தை காண அஜித் ரசிகர்கள் நள்ளிரவு முதலே ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களமாக கொண்டாடி வந்தனர்.

பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பாண்டியன்

இந்த நிலையில், அஜித்குமாரின் தீவிர ரசிகரான அஜித்குமார் என்ற இளைஞர், விஸ்வாசம் படம் பார்க்க தந்தையிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார். ஆனால், அவரது தந்தை பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர செயலை செய்தவர் காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார், இவரது தந்தையான பாண்டியன் படம் பார்க்க பணம் கொடுக்காத ஆத்திரத்தில்,  தூங்கிக் கொண்டு இருந்த தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.

இதில், முகம் மற்றும் கையில் காயமடைந்த தந்தை பாண்டியன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அஜித்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.