முதலமைச்சரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்….!

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார்.

‘வலிமை’ படம் பற்றி ஏதேனும் அப்டேட் கொடுங்கள் என போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேட்டு கேட்டு டயர்டாகி விட்டனர்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட இன்னும் வெளியாகவில்லை என்பதில், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ட்விட்டர் பதிவில் அஜித் ரசிகர் ஒருவர், ‘வலிமை அப்டேட் வாங்கிக் கொடுங்க ஐயா. எங்கள் ஓட்டை உங்களுக்குப் போடுகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அஜித் ரசிகர்கள் ‘தலைவா. வலிமை எப்போது வரும்.. வலிமை அப்டேட் கொடுங்க’ என கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

 

 

You may have missed