விவேகம் படத்தைப் பார்த்த ரசிகர் தியேட்டரிலேயே மரணம்!

காரைக்கால்:

ஜித் நடித்த விவேகம் படத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணம் மாவட்டம் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபுருதீன். ( வயது31. வெளிநாட்டில் பல வருடங்களாக பணி புரிந்து வந்த அவர் சமீபத்தில்  சொந்த ஊருக்குத் திரும்பினார்.

இந்த நிலையில், அஜித் நடித்திருக்கும் விவேகம் படம் நேற்று உலகம் முழுவதும்  வெளியானது. இந்த படத்தைப் பார்க்க சபுருதீன், தனது  நண்பர்களுடன் காரைக்காலில் உள்ள ஒரு திரையரங்கிற்கு  சென்றார்.

படத்தை பார்த்துக்கொண்டிருந்த போதே திடீரென  அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.  அவர், நிலை தடுமாறி அங்கேயே விழுந்தார். இதனால்  அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபுருதீன்  இறந்த செய்தி அறிந்த  அவரது மனைவி ஆலம் முனிராபேகம், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.