விஜய் பிறந்தநாள் ஹேஷ் டேக்- கை பின்னுக்கு தள்ளிய தல அஜித் ரசிகர்கள்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய், இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

சமூகவலைதளங்களில் நேற்று இரவு முதலே #HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கினர் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக்கில் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டனர்.

அதேவேளையில் நடிகர் அஜித் ரசிகர்களும் #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை போட்டி போட்டிக் கொண்டு இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கச் செய்தனர்.

https://twitter.com/kavin_follower/status/1274996968310235145

இது ஒரு புறமிருக்க #HBDKavin என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய பிக் பாஸ் புகழ் கவின் ரசிகர்கள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளனர் .