எச்.வினோத் இயக்கும் அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தைப் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்.

அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் வெளியீடு, 2020-ம் ஆண்டின் புத்தாண்டு விடுமுறையில் அமையுமாறு படக்குழு திட்டமிட்டு வருகிறது. என்றும் தகவல் வெளியாகியுள்ளது.