`ஆர்டிகிள் 15′ படத்தின் ரீமேக்கில் அஜித்…..?

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ’தல 61’ திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ’ஆர்ட்டிக்கிள் 15’ என்ற படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியான படம் `ஆர்டிகிள் 15′. சாதி எதிர்ப்பை மையமாக வைத்து வெளியான இப்படத்தை மக்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருந்தது. அனுபவ் சின்ஹா தயாரித்து இயக்கிய இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்திருந்தது. படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றிருந்தார்.

கார்ட்டூன் கேலரி