பாலிவுட்டில் கதாநாயகனாக கால்பதிக்கும் தல அஜித்…!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 60-வது படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தல 60’ என்று  அழைக்கப்படும் இந்தப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அஜித் கதாநாயகனாக இந்தியில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுவே. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் அஜித், ‘அசோகா’ படத்தில் ஷாரூக்கானின் சகோதரர் கதாபாத்திரத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.