அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடங்கியது….!

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. அந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் வலிமை பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X 100 திரைப்பட புகழ் கார்த்திகேயா, வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதித்ததை அடுத்து அஜித்தின் வலிமை படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.