தல அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது

தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அஜித்தின் இடதுகையில் பெரிய தழும்பு உள்ளது. இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது படப்பிடிப்பின் போது ஆனதா? அல்லது வெளியில் இருக்கும் போது ஏற்பட்டதா? என ரசிகர்கள் கவலையுடன் கேட்டு வருகின்றனர்.