சமூகவலைதளங்களில் வைரலாகும் கருப்பு மாஸ்க் அணிந்து குடும்பத்துடன் காரில் பயணிக்கும் அஜித் வீடியோ…!

நடிகர் அஜித் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவரை போலவே அவரது மகன், மகளும் சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றி வைரலாகி வருகின்றனர்.

அஜித் பெரும்பாலும் பொது இடங்களுக்கு வருவது இல்லை. அதேபோல் தான் தனது குடும்பத்தையும் வைத்து இருப்பார். இதையும் மீறி அவரது குடும்ப புகைப்படம் வெளியாகிவிடும்.

லாக்டவுன் காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அஜித், கடந்த மே மாதத்தில் தனது மனைவியுடன் மருத்துவனை சென்ற வீடியோ வெளியாகி வைரலானது.

 

இந்நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தலையில் தொப்பி, முகத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்தபடி இருக்கிறார் அஜித்.