‘தல 60’ படத்திற்காக உடல் எடையை குறைத்த அஜித்…!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பின் அஜித்தின் 60-வது படத்திலும் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29-ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக உருவாக உள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது . இந்நிலையில் அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.