அஜீத் நடிகைக்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.. வாழை இலையிலயா டிரஸ் போடுவீங்க..

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’விஸ்வாசம்’ படத்தில் அஜீத்குமார், நயன்தாரா மகளாக நடித்த வர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அதில் நடித்திருந்தார். ஜெயலலிதா வாழ்க்கை தழுவி கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் சீரீஸிலும் இவர் நடித்திருந்தார்.


அஜீத்தின் மகளாக நடித்தது அனிகாவுக்கு பெரிய பிளஸ் ஆக அமைந்தாலும் குமரிப்பெண் ஆகிவிட்ட நிலையில் அவர் கவர்ச்சி படங்கள் வெளியிட்டால் அவரை அஜீத் ரசிகர்கள் கண்டிக்க தொடங்கி விடுகின்றனர்.
சமீபமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக கவர்ச்சி போஸில் படங்கள் பகிர்ந்து வருகிறார் அனிகா. வாழை இலைகள், வாழைப்பு, மட்டை ஆகியவற்றை ஆடையாக உடுத்தி புகைப்படம் வெளியிட்டார். வழக்கம்போல் அவருக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின் றனர். அஜீத் மகளாக நடித்துவிட்டு இப்படியா கவர்ச்சி படக்களுக்கு போஸ் தருவது என்றும். இன்னும் சிலர் வித்தியாசமான காஸ்டியூம் என்றும் பாராட்டி கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.