போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை.

சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்படுகிறது.

அஜித் அண்மையில் வாரணாசிக்கு சென்றது தெரிய வந்தது. சாட் கடைக்காரருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் சில நாட்கள் முன்பு வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்று அஜித்தின் லேட்டஸ்ட் லுக் கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது.