பயிற்சியாளர்க்கு தல அஜித் கொடுத்த மரியாதை….!

நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருபவர் தல அஜித் .

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார் அஜித் .

பயிற்சியின்போது தனக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஏதோ சொல்ல உடனே எழுந்து நின்று தனது தொப்பியைக் கழட்டி வைத்து விட்டு தலையசைத்து கேட்கிறார் அஜித்.

இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் தலைக்கனம் இல்லாத தன்னம்பிக்கையை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.