அஜித்தின் மாஸ் லுக் ; ட்ரெண்டாகும் புகைப்படங்கள்….!

தல அஜித்தை பொது இடங்களில் பார்ப்பது எளிது இல்லை. அதனால் அவரின் புகைப்படங்கள் ஏதாவது வெளியானால் ரசிகர்கள் துள்ளிக் குதிப்பார்கள்.

ஒரு சில தினங்களுக்கு முன் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியது. ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு அஜித்துடன் சேர்ந்து செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் ஷார்ட்ஸ், டி சர்ட், தொப்பியில் இருக்கிறார் அஜித்.

அஜித் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் கமிஷ்னர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பில் பயிற்சி எடுக்க வந்த புகைப்படங்கள், மற்றும் அஜித் துப்பாக்கியோடு நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், அஜித் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார். அதற்காக சென்னை ரைபிள் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார் அஜித்.பயிற்சிக்கு வந்த அஜித்தின் படங்கள் இணையத்தில் வெளியாகி, ட்ரெண்டாகி வருகின்றன.