நடிகர் அஜித் தனது மகன் பிறந்தநாளை ஆடம்பரமாக ஹோட்டலில் பிரமாண்டமாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

aijth

பிரபல நடிகர், பைக் பந்தய வீரர், புகைப்பட கலைஞர், விமானம் இயக்க தெரிந்தவர் என சினிமாவை தாண்டி பல திறமைகளை கொண்டவர் அஜித். ஊடக வெளிச்சத்தில் அதிகம் புலப்படாத நபர் என்றால் அது அஜித் தான். தான் நடிக்கும் படங்களுக்கான விளம்பர பணிகளில் கூட அவர் பங்கேற்க மாட்டார். அதேபோல், டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அஜித்தை காண்பது அரிது.

ajith

இருப்பினும் எளிய மனிதர், பண்பாளர், திறமையான நடிகர், பன்முகத் தன்மை கொண்டவர் என பலர் அஜித்தை குறிப்பிடுவது வழக்கம். அப்படிபட்ட அஜித் தனது செல்ல மகன் ஆத்விக் பிறந்த நாளை சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் ஆடம்பரமாக கொண்டாடியுள்ளார். இதில் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாடத்தின் போது ஹோட்டல் ஊழியர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.