ஜினியின் கபாலி பட டீசர் வெளியானபோத பெற்றதைவிட அதிக லைக்குகளை பெற்றிருக்கிறது அஜித்தின் விவேகம் டீசர்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கி ரஜினி நடித்த படம் கபாலி. இந்தப் படத்தின் டீசருக்கு தமிழ் ரசிகர்களிடையே வரலாறு காணாத வரவேற்பு  கிடைத்தது. இதுவரை கபாலி டீசர் 3 கோடியே 41 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. வேறு எந்தத் தமிழ்ப்படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இது.

இப்போது அந்த சாதனையை முறியடித்திருக்கிறது அஜீத்தின் விவேகம் பட டீசர். கடந்த மே மாதம் 10ம் தேதி வெளியான இந்தப்பட டீசர் கடந்த மூன்று மாதங்களில் 1.9 கோடி பார்வைகளும், 5.27 லட்சம் லைக்குகளும் பெற்றுள்ளது. அதே நேரம், 77 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் டீசருக்கு டிஸ்லைக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யுட்யூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்ற வகையில் விவேகம் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் அதிக பார்வைகள் என்ற கணக்கில் இன்னமும் கபாலிதான் டாப்!