மீண்டும் அஜித் – எச்.வினோத் கூட்டணி…!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எச்.வினோத் – அஜித் சந்திப்பு நடந்துள்ளது. வினோத்தின் அடுத்த படத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் அஜித்.

இதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டப்பிங் பணிகளுக்கு இடையே, அஜித் ஒப்புதல் அளித்த கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார் எச்.வினோத்.இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார்.