திரையுலகில் ரசிகர்களின் ஆதர்ஷ நாயகனாக திகழ்பவர் தல அஜித்.

சமீபத்தில் திருமண விழா ஒன்றில் அஜித்தின் குடும்பத்தினர் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தது.

இந்தப் புகைப்படங்கள் அனைவரும் பகிர்ந்து Kutty Thala என்று குறிப்பிட்டதால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வந்தது.

ஆத்விக்கிற்கு பிடித்த விஷயங்கள் குறித்து பிரபல வார பத்திரிக்கையில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் அஜித் நடித்த படங்களிலேயே, மங்காத்தாவும், விஸ்வாசமும் ஆத்விக்கிற்கு மிகவும் பிடித்தப் படங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆத்விக் பிறந்த தினம் இன்று. இணையத்தில் பலரும் ஆத்விக் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். KuttyThala எனும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்துள்ளனர்.