‘அடிச்சுத்தூக்கு’… ‘: விஸ்வாசம் சிங்கிள் ட்ராக் வெளியானது

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் அடிச்சித்தூக்கு பாடல்  இன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.  சத்யஜோதி பிலிம்ஸ்   தயாரித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்தப் படத்தின் மூலம் அஜித்துக்கு முதன்முதலாக டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும்  வரவேற்ப்பை பெற்றது. அடுத்தடுத்து போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் சிங்கில் டிராக் ‘அடிச்சுத் தூக்கு’ என்ற பாடல் மாலை 7 மணிக்கு கானா ஆப்பில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது.